For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி சென்னை, அடையாறில் 2120 சதுர அடியிலான அரசு நிலத்தை ஒதுக்கி, அதில் ரூ.2.80 கோடி செலவில் மணி மண்டபம் அமைக்க உத்தரவிட்டார்.

Sivaji's Manimandapam inauguration function: Deputy CM takes part in function

அப்பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட மணி மண்டபப் பணிகள் இந்த ஆண்டு மே மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் மணி மண்டபத்தை எப்போது திறப்பது என்பது குறித்து தமிழக அரசு அறிவிக்காமலேயே இருந்தது.

இந்நிலையில் இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், கார்த்தி, விஷால், ராஜேஷ், சரத்குமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் பிரபு உள்ளிட்ட சிவாஜிகணேசன் குடும்பத்தினரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

English summary
Sivaji Ganesan's Manimandapam is going to open today in Adyar. Deputy CM O.Panneer Selvam going to take part in this function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X