சிவாஜி கணேசன் சிலையை அகற்ற ஒர் ஆண்டு அவகாசம்: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை தமிழக அரசு ஒரு ஆண்டுக்குள் அகற்றிவிடுவதாகக் கூறியதால், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு ஆண்டு அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அதனை அகற்றக் கோரி சீனிவாசன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம் கட்டுவதற்காக பல்வேறு துறைகளுடன் தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. தற்போது காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு, தமிழக அரசு கட்டப்போகும் அந்த மணிமண்டபத்தில் வைக்கப்படும். அதனை கட்ட ஒரு ஆண்டுகள் ஆகும் என்பதால், ஒரு ஆண்டுக்குள் சிவாஜி சிலையை அகற்றிவிடுவதாக தமிழக அரசு இன்று பதில் அளித்தது.
இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஒரு வருடத்தில் சிலை அகற்றப்படும் என்பதால், ஓராண்டு கால அவகாசம் அளித்து உத்தர விட்டது.வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications