விமர்சனம் செய்த தம்பிகளை விரைவில் முகநூலில் சந்திப்பேன் - சிவகுமார்
முகநூலில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான கணக்கான தமிழ் நெஞ்சங்களையும் விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன் என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.
கொங்கு மண்ணில் பிறந்த மாவீரன் தீரன் சின்ன சின்னமலை மற்றும் முதல் சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் ஆகிய இருவரைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளை கடந்த சில தினங்களுக்கு முன் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார் சிவகுமார். நடுநிலையான வரலாற்றுப் பதிவான அவற்றுக்கு, சிலர் உள்நோக்கம் கற்பித்து விமர்சனம் எழுதினர். சிவகுமார் குடும்பத்தினர், சூர்யா, கார்த்தி குடும்பம் பற்றியெல்லாம் மோசமாகப் பதிவிட்டனர். சாதி வெறியுடன் சிலர் எழுதியது சிவகுமாருக்கு வருத்தம் தர, அவர் முகநூலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

இதனை எதிர்ப்பார்க்காத அவரது ஃபாலோயர்கள், 'நீங்கள் பேஸ்புக்கை விட்டு விலகக் கூடாது... தொடர்ந்து எழுத வேண்டும்,' கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் மீண்டும் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "போர்ப்படைத் தளபதி கருபன் சேர்வைத் தேவரை கையாள் (தீரன் சின்னமலை பதிவில்) என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இன்று தனது முகநூலில் கூறி உள்ளார்.
அந்தப் பதிவு:
வரலாற்று ஆய்வாளர் சகோதரி நிகிலா நிகி அவர்களும் மற்ற சகோதரர்களும் குறிப்பிட்டதுபோல போர்ப்படைத் தளபதி கருபன் சேர்வைத் தேவரை கையாள்
என்று தவறுதலாக எழுதியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் வரலாற்றை இன்னும் தெளிவாக படிக்க வேண்டும். முகநூலில் என் பதிவுகள் தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்த ஆயிரக்கணக்கான கணக்கான தமிழ் நெஞ்சங்களையும் விமர்சனம் செய்த தம்பிகளையும் விரைவில் சந்திப்பேன். நன்றி!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications