செந்தில் பாலாஜி நீக்கம்… கரூரில் சிவனடியார்கள் மகிழ்ச்சி!
கரூர்: செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி கட்சிப்பதவி பறிக்கப்பட்டதற்கு யார் மகிழ்ச்சியடைந்தார்களோ இல்லையோ கரூரில் உள்ள சிவனடியார்கள் அதிகமாக மகிழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் உள்ள மாரியம்மன் கோவில், சிவன் கோவிலை அம்மா கோவிலாக மாற்றிய செந்தில் பாலாஜிக்கு பக்தர்களும், சிவனடியார்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இந்த பதவி பறிப்பு நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மையப்பகுதி என்ற பெயர் மட்டுமில்லாமல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை ஆன்மீகத்திலும், வரலாற்றிலும், வணிகத்திலும் சிறந்து விளங்குவது கரூர் நகரம் ஆகும்.
உலகப்புகழ் பெற்ற கரூர் மாரியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாத பெருவிழா நடப்பது வழக்கம், கரூர் மாரியம்மனிடம், தீர்க்கப்படாத எண்ணற்ற காரியங்களை பக்தர்களுக்கு நிறைவேற்றும் மாரியம்மனுக்கு ஏழை,, எளிய மக்கள் முதல் அனைவரும் கரூர் மாரியம்மனிடம் வேண்டி தங்களது வேதனைகளையும் சோதனைகளையும் தீர்த்த மாரியம்மனுக்கு, அதிகாலை 2 மணி முதல் பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம், அக்னிச்சட்டி எடுத்தல், ஈட்டி அலகு குத்துதல், 1008 அலகு, பறவை போல் தொங்கும் அலகு போன்ற எண்ணற்ற நேர்த்திக்கடனை, பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக்குவது வழக்கம்.

மாரியம்மன் கோவில் பக்தர்கள்
கடந்த 26-05-15 அன்று கரூர் மாரியம்மன் திருக்கோயிலில் அம்மாவிடம் பெயர் வாங்குவதற்காக சுமார் 5 ஆயிரம் பேர் மொட்டையடிப்பதாக கூறி, ஒரு பக்தர்களை கூட நள்ளிரவு முதல் மதியம் வரை அ.தி.மு.க விற்கு சொந்தமான கோயிலாகவே கரூர் மாரியம்மன் திருக்கோவிலை மாற்றினார் செந்தில் பாலாஜி என்ற புகார் எழுந்தது. வெளியூர்களில் இருந்து மாரியம்மனை தரிசிப்பதற்காகவும், வேண்டுதல்களை நிறைவேற்ற வந்த பக்தர்கள் இதனால் ஏமாற்றத்துடனும், கடுமையான கோபத்துடனும் திரும்பி சென்றனர்.

பிறந்தாள் கொண்டாட்டம்
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் கரூர் மாவட்டத்தில் உள்ள 2756 கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிசேகம் நடைபெற்றது. ஆனால் ஆகம விதிகளையும், ஐதீகங்களையும், கோவில் வழிபாட்டு முறையையும் கடைப்பிடிக்காமல், "அம்மா"விடம் பெயர் வாங்குவதற்காக தெய்வம் குடி இருக்கும் ஓவ்வொரு ஆலயத்திலும் தன் அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு அங்கிருக்கும் ஆலயநிர்வாகத்திடம், ஐதீக முறை இல்லாமல் தாங்கள் இஷ்டப்படி அவர்களே தங்கள் எண்ணம் போல ஆலய முறையையே மாற்றி வருகிறார்கள் என்ற புகாரும் எழுந்தது.

கோவில் கருவறை
மாரியம்மன் திருக்கோயிலில் அவர் அங்கப்பிரதட்சணம் செய்யும் போது, விதிமுறைக்குப் புறம்பாக கருவறையை புகைப்படம் எடுத்தனர், டிவி கேமராவிலும் படம் பிடித்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்ளூர் தொலைக்காட்சிகளில்
இந்து சமய அறநிலையத்துறையின் வசம் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் ஏற்கனவே பல முறை கருவறையை படம் எடுப்பது. உள்ளூர் தொலைக்காட்சிகளில் காண்பிப்பது. ஆலய வழிபாடு என்ற பெயரில் சிவ பக்தர்களை முகம் சுழிக்கும் வகையில் இவர்களே அ.தி.மு.க விற்கு சொந்தமான கோயில் போல் நடந்து கொண்டு வருகிறார்கள்.

அம்மா தீபம்
அது மட்டுமல்லாது பசுபதீஸ்வரர் கோவிலில் அம்மா என்ற பெயரிலே பல பகுதிகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் சிவனைத்தவிர எந்த ஒரு தனி மனிதனையும் கடவுளுக்கு இணையாக எந்த ஒரு செயலையும் செய்ததில்லை. ஆனால் அந்த விதியை மீறி அம்மா என்ற பெயரில் தீபம் ஏற்றப்பட்டது என்று சிவனடியார்கள் புகார் தெரிவித்தனர்.

கோவிலில் புகை மண்டலம்
தீபம் நிகழ்ச்சியில் தீபங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து எரிந்ததால் அங்காங்கே புகை மண்டலமாக மாறியது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்குஆளாகினர். இந்த தீப வழிபாட்டில் அதிமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விளக்கு ஏற்றுவதற்காக இங்கு விதிகள் முற்றிலும் மாற்றப்பட்டது.

பக்தர்கள் முகம் சுழிப்பு
ஆநிலையப்பர் திருக்கோயிலை அம்மா கோயிலாக மாற்றிவிட்டார்களோ என்று நினைத்து வந்தவர்கள் அனைவரும் முகம்சுளித்து கோயிலுக்குள் செல்லாமல் வேறு கோயிலுக்கு திரும்பிச் சென்றனர்.

சிவனடியார்கள்
சிவன் வழிபாட்டையும், சிவ பக்தர்களையும் அவமானப்படுத்தியதற்காக எறிபத்த நாயனார் வாழும் இடமான இந்த பிரதான கோயிலில் நடந்த இந்த செயல், சிவபக்தர்களையும், சிவனடியார்களையும் கோபத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதற்கு சிவனடியார்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications