குப்பையில் கிடந்த 4 மனித மண்டை ஓடுகள்.. கை, கால்களின் எலும்புகள்.. திருச்சி கேகே நகரில் பரபரப்பு
குப்பையில் 4 மண்டை ஓடுகள், எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி: மண்டை ஓடுகளும், எலும்புகளும் குப்பையில் வீசப்பட்டுள்ள சம்பவம் திருச்சி கேகே நகரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், குப்பையில் வீசப்பட்ட இந்த மண்டைஓடுகள், எலும்புகள் நரபலிக்காக பயன்படுத்தப்பட்டதா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கே.கே.நகர் சுப்பிரமணியநகர் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வரும் இடம் ஒன்று உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அதன் அருகிலேயே நீரேற்று நிலையம் உள்ளதால், தண்ணீர் திறக்க மாநகராட்சி ஊழியர்கள் சிலர் இன்று காலை அங்கு வந்தனர்.

4 மண்டைகள், எலும்புகள்
அப்போது அங்கிருந்த குப்பையில் ஒரு துணி பை இருந்தது. பெரிய மூட்டையாக அந்த துணிப் பை இருந்ததால் அதனை எடுத்து ஊழியர்கள் பிரித்து பார்த்தனர். அதில், 4 மனித மண்டை ஓடுகள், கை, கால்களின் எலும்புகள் இருந்தன. அதில் ஒரு மண்டை ஓட்டின் நெற்றியில் குங்குமம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். குப்பையில் மண்டை ஓடு இருந்த தகவல் அப்பகுதி முழுவதும் தீயாக பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டு வந்து மண்டை ஓடுகளை பார்த்தனர்.

போலீசார் விசாரணை
இந்த பகுதியில் உள்ள குப்பைகள் எல்லாம் மறுநாள் காலையிலேயே அகற்றப்படுவிடுமாம். அதனால் இந்த துணிப்பையையும் எடுத்து சென்றுவிடுவார்கள் என்று நினைத்து இந்த மண்டை ஓடுகள், எலும்புகளை யாரேனும் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கே.கே.நகர் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் குப்பையில் கிடந்த மண்டை ஓடுகள், எலும்புகளை ஆய்வு செய்தனர்.

பில்லி, சூனியமா?
இந்த எலும்புகள், மண்டை ஓடுகளை மந்திரவாதிகள் யாரேனும் பில்லி, சூனியம் மற்றும் செய்வினை போன்ற மந்திர காரியங்களுக்காக பயன்படுத்தி விட்டு பிறகு வந்து குப்பையில் வீசிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் யாராவது நரபலி கொடுக்கப்பட்டவர்களின் மண்டை ஓடுகளாகவும் இவை இருக்கலாம் என்றும் தெரிகிறது.

எலும்புகள் ஆய்வு
மற்றொரு புறம், அறிவியல் ஆராய்ச்சி கூடத்தில் இந்த மண்டை ஓடுகளும், வைக்கப்பட்டு பின்னர் அது தேவையில்லை என்பதால் குப்பையில் போட்டுவிட்டு போயிருப்பார்களோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் கே.கே.நகர் போலீசாரின் விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும் என்பதால் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications