திடீர் பழுது... திருச்சி-துபாய் ஏர் இந்தியா விமானம் சென்னையில் தரையிறக்கம்
சென்னை: திருச்சியிலிருந்து 169 பயணிகளுடன் துபாய்க்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் பழுது காரணமாக அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த அத்தனை பேரும் பத்திரமாக இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

169 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் அந்த விமானம் இன்று அதிகாலையில் திருச்சியிலிருந்து துபாய்க்குக் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் பழுது ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அப்போது விமானம் சென்ற பகுதிக்கு அருகில் இருந்த சென்னை விமான நிலையம் உஷார்படுத்தப்பட்டது. தக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டதும், விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
விமான பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இன்று பிற்பகலுக்கு மேல் விமானம் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications