தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யும்: சென்னையில் மேகமூட்டம் மட்டுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் துவங்கிய கையோடு வெப்பம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. அதிலும் குறிப்பாக தென்மாவட்டங்களில் 4 நாட்கள் பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சி அடைய செய்தது.

Some parts of TN will receive rain today

ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் வெப்பம் அதிமாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும்.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும், வேலூர் மாவட்டம் திருப்பூர், குடியாத்தம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும், தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+