மாமனாரின் காதலியை ஆத்திரத்தில் குத்திக் கொன்ற மருமகன்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மாமனாரின் காதலியை குத்திக் கொன்ற மருமகன் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை சந்தைபேட்டையைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் முனியம்மாளின் கணவர் முருகேசன். தன்னுடைய முதல் மனைவி இறந்த பின்னர் நாகம்மாள் என்ற பெண்ணுடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார் கலியமூர்த்தி.
இச்செயல் பிடிக்காத மகளும், மருமகனும் அவரைக் கண்டித்துள்ளனர். ஆனால், அவர் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் முருகேசன் தன்னுடைய நண்பர் முனிபாண்டியுடன் கலியமூர்த்தி வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது நாகம்மாளும் அங்கு இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன் மாமனாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். கோபம் தலைக்கேறியதில் முருகேசன் மாமனாரைக் கத்தியால் குத்த வந்துள்ளார். குறுக்கே புகுந்த நாகம்மாள் கத்திக் குத்தால் உயிரிழந்தார்.
பிரச்சனை வெளியே தெரியாமல் இருக்க, நாகம்மாளின் உடலை புதைக்க கொண்டு சென்றனர். தகவல் தெரிந்த நாகம்மாளின் உறவினர்கள், புதுக்கோட்டை போலீஸில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், முருகேசன் மற்றும் முனிபாண்டி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications