வீட்டை எழுதித்தர மறுத்த தந்தை... கம்பியால் அடித்துக்கொன்ற மகன்... கோவையில் அதிர்ச்சி
கோவை அருகே வீட்டை தன் பெயருக்கு எழுதித்தர மறுத்த தந்தையை மகனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மகனை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரு
கோவை: பீளமேடுபுதூரில் வீட்டை எழுதி தர மறுத்த தந்தையை மகனே இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை - பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்மாசியப்பன். 80 வயதான இவருக்கு பாலச்சந்திரன் என்ற மகன் உள்ளார்.

அம்மாசியப்பனுக்கு நகர் பகுதியில் 2 வீடுகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி அம்மாசியப்பன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் தனது வீட்டில் பிணமாக கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அம்மாசியப்பனின் மகன் பாலச்சந்திரன் தலைமறைவானார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
அம்மாசியப்பன் மரணம் குறித்து பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. விசாரணையில் பாலச்சந்திரன் கூறியதாவது, "என் தந்தை அம்மாசியப்பன் பேரில், சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. அதை என் பெயரில் எழுதி தருமாறு அவரிடம் பல நாட்களாக கேட்டு வந்தேன். ஆனால், அவர் என் பெயருக்கு எழுதித்தர மறுத்து விட்டார்.
அவரை கொலை செய்துவிட்டால், அவருக்கு பிறகு, அந்த இரண்டு வீடுகளும் எனக்கு வரும் என்பதால், அவரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்தேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications