சென்னை தீவுத்திடலில் மே.5ல் பொதுக்கூட்டம்: சோனியா, கருணாநிதி ஒரே மேடையில் பிரச்சாரம்
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தியும், திமுக தலைவர் கருணாநிதியும் ஒரே மேடையில் பங்கேற்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் சென்னை தீவுத்திடலில் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. சோனியா காந்தி உரையாற்றவிருக்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளது.கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் தமிழகத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

ஒரே மேடையில் சோனியா - கருணாநிதி
திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மே 5ம் தேதி சென்னை வர உள்ளார். அன்று மாலை சென்னையில் தீவு திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேசுகிறார்.

தீவுத்திடலில் பிரம்மாண்ட மேடை
சோனியா - கருணாநிதி பேச இருக்கும் தீவு திடலை தி.மு.க. முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் வேட்பாளர்கள் சேகர்பாபு, ராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜனும் உடன் சென்றனர்.

ஒரு லட்சம் பேர் பங்கேற்பு
பொதுக்கூட்டம் பற்றி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறும்போது, 1 லட்சம் பேர் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் மேடையில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். மே 5ம் தேதி புதுச்சேரி பிரசாரம் செய்யும் சோனியா காந்தி, மாலையில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

ஸ்டாலின் - ராகுல்காந்தி
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் சாலை வழியாக சென்று ஆதரவு திரட்டுகிறாரா அல்லது பொதுக்கூட்டங்களில் மட்டும் கலந்து கொள்வாரா என்பது பற்றி முடிவு செய்யவில்லை. ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுவார் என்று கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications