தைரியம் இருந்தால் கருணாஸ் என்னை அடித்து பார்க்கட்டும்... அதிமுக எம்எல்ஏ ஆவேசம்!
தைரியம் இருந்தால் கருணாஸ் என்னை அடித்து பார்க்கட்டும் என அதிமுக எம்எல்ஏ கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.
சென்னை: தைரியம் இருந்தால் கருணாஸ் என்னை அடித்து பார்க்கட்டும் என அதிமுக எம்எல்ஏ கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் அவர் பேசினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே நான் அடிப்பேன் என பயப்படுகிறார் என்றார்.

கருணாஸ் மிரட்டல்
காவல்துறை அதிகாரிகளையும் அவன் இவன் என ஏக வசனத்தில் பேசிய கருணாஸ் பல் துலக்கும் நேரத்தில் கொலை செய்துவிடுவோம் என்றும் யூனிஃபார்மை கழட்டி வைத்துவிட்டு வா மோதிப்பார்க்கலாம் என்றும் மிரட்டல் விடுத்தார்.

வழக்குப்பதிவு
அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்ய 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கைது செய்ய வேண்டும்
கருணாஸின் இந்த சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர்களும் அதிமுக எம்எல்ஏக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கருணாஸின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சாதி பிரச்சனையை தூண்டியதாக கருணாஸை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆயிரம் கருணாஸ்கள்
மேலும் சர்ச்சைப் பேச்சை கருணாஸ் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் கருணாஸ் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆயிரம் கருணாஸ்கள் உருவாகி விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

என்னை அடித்துப்பார்க்கட்டும்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடித்தால் வாங்கிக்கொள்வார், ஏனென்றால் அவர் ஏசுநாதரைப் போல. கருணாஸ்க்கு தைரியம் இருந்தால் என்னை அடித்துப்பார்க்கட்டும் என்றும் சூலூர் எம்எல்ஏ கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications