பொதிகை உட்பட தென்மாவட்டங்களுக்கு செல்லும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் அறிவிப்பு!
தென்மாவட்டங்களுக்கு செல்லும் 5 ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்ட ரயில்சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வர்தா புயலால் வட தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான தென்மாவட்ட ரயில்கள் விழுப்புரம் மற்றும் விருத்தாசத்திலேயே நிறுத்தப்பட்டன. இந்த ரயில்கள் சென்னைக்கு வந்து மீண்டும் தென்மாவட்டங்களுக்கு புறப்படுமா? என்ற குழப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Restoration of Train Services post cyclone @RailMinIndia @DrmChennai @SalemDRM @TVC138 @DRMTPJ @propgt14 @maduraidivision pic.twitter.com/Rnf1yu4B87
— @GMSouthernrailway (@GMSRailway) December 13, 2016
ரயில்கள் புறப்படும் நேரம்:
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் - மாலை 5.30
ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ்- மாலை 5.45
தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ்- இரவு 7.30
திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் - இரவு 7.50
செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்- இரவு 8.55












Click it and Unblock the Notifications