தென் தமிழகத்தில் மழை பெய்யும்.. வானிலை மையம் கூல் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில் கடந்த சில நாட்களக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

Southern Tamilnadu will get rain: Chennai meteorological center

இரவு மற்றும் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

இந்நிலையில் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் வீசும் காற்றின் வேகம் மாறுபடுவதால் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai meteorological center says, Southern Tamilnadu will get rain. The weather center said it was possible to have a slight rainfall due to the wind speeds varying in the Bay of Bengal.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற