கேரளாவில் அடுத்த வாரம் தொடங்குகிறது, தென் மேற்கு பருவமழை! தமிழகத்தில் வெயில் குறையும்
சென்னை: அடுத்த வார தொடக்கத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
நாட்டுக்கு அதிக அளவில் மழையை கொண்டுவந்து சேர்ப்பது தென் மேற்கு பருவமழை காலம். நான்கு மாதங்கள் நீடிக்கும் பருவமழை ஜூன் 1ம் தேதியையொட்டி கேரளாவில் கால் பதிப்பது வழக்கம். படிப்படியாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் பருவமழை பரவும்.

இவ்வாண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக வருகை தந்துள்ளது. இப்படி தாமதமாக பருவமழை தொடங்குவது கடந்த 50 வருடங்களில் இதுதான் முதல்முறை.
இவ்வாரத்தில் தொடங்க வேண்டிய தென் மேற்கு பருவமழை அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் கேரளாவில் காலடி எடுத்து வைக்க உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ஸ்டெல்லா இன்று தெரிவித்தார்.
இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும், படிப்படியாக தமிழகத்தில் வெப்பத்தின் அளவு குறையும் என்றும், ஸ்டெல்லா கூறினார்.

அடுத்து 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக ஊத்தங்கரை மற்றும் தருமபுரியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் ஸ்டெல்லா மேலும் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications