ஆட்சியை கவிழ்க்க தினகரன் எம்.எல்.ஏக்கள் சதி: ஹைகோர்ட்டில் சபாநாயகர் திடுக் தகவல்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க தினகரன் எம்.எல்.ஏக்கள் சதி செய்தனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் திடுக்கிடும் பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கவிழ்க்க தினகரன் எம்.எல்.ஏக்கள் சதி செய்தனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சபாநாயகர் தனபால் திடுக்கிடும் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதன்படி இன்று அந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன் தரப்பு சார்பில் அபிஷேக் சிங்வியும், அரசு தரப்பில் முகுல் ரோத்தகியும் ஆஜராகினர்.

பதில் மனுவில் சபாநாயகர் கருத்து
மேலும் சபாநாயகர் தனபால் தனது பதில் மனுவில் 18 எம்எல்ஏக்களும் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தனர். ஆட்சியை கவிழ்ப்போம் என்று பேசியதற்கான ஆதாரம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளார். சபாநாயகர் தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி கூறுகையில் ஆட்சியை கவிழ்ப்போம் என தங்கதமிழ் செல்வனும், வெற்றிவேலும் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றார்.

டிடிவி தினகரன் தரப்பு வாதம்
சபாநாயகர் உத்தரவால் அனைத்தும் இழந்தோம். 18 பேரும் அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டுத்தந்தது என்பது தவறான கருத்து. தகுதிநீக்க உத்தரவு நேரடியாக எங்களுக்கு தரவில்லை.

அரசாணை வெளியீடு
தகுதி நீக்க உத்தரவு ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டு அரசாணை இரவில் வெளியிடப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பால் அரசு மாறும் என நம்பிக்கை உள்ளது. ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததாக நாங்கள் கொடுத்த புகாருக்கு ஓபிஎஸ் தரப்புக்கு நோட்டீஸ் கூட தரவில்லை. ஆனால் எங்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார்.

கொறடா நகல் எங்கே?
எங்கள் மீது கொறடா கொடுத்த புகார் மனுவின் நகல் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. தகுதிநீக்கம் குறித்து சபாநாயகர் நோட்டீஸுக்கு 4 முறை ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். அதற்கு பதிலளித்த ரோத்தகி, கொறடாவின் புகார் நகலை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவிச்சந்திரபாபு வழக்கு விசாரணையை வரும் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications