தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை... நாளை அரசியல் கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை!
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பத்ரா சென்னை வந்துள்ளார்.
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா சென்னை வந்துள்ளார். அவர் நாளை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. வருகிற வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் வேட்பாளர்கள் பெயர் பொருத்தும் பணி முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுமே பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதால், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளன.

15 கம்பெனி சிஆர்பிஎஃப்
மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக இன்று ஆர்கே நகர் தொகுதியில் சிஆர்பிஎஃப் படையினரின் அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. கண்காணிப்புப் பணியில் 15 கம்பெனி சிஆர்பிஎஃப் படைகள் பயன்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரம் 20ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் தரப்படுகின்றனவா என்றும் தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

சென்னை வந்தார் தேர்தல் சிறப்பு அதிகாரி
இந்நிலையில் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தேர்தல் ஆணைய இயக்குனர் விக்ரம் பத்ரா சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் தேர்தலில் ஆணைய விதிமுறைகள் முழுவதும் கடைபிடிக்கப்படும் அரசியல் கட்சியினர் மாறி மாறி புகார் கூறுகின்றனர், புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நாளை ஆலோசனை
இதனிடையே சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா நாளை ஆர்கே நகர் தேர்தல் களத்தில் இருக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தேர்தலை இடையூறுகள் இன்றி சிறப்பாக நடத்த அரசியல் கட்சியினரை அவர் கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications