வேலூரில் 2 பேரை கொன்றுவிட்டு விருட்டென சென்ற கார்: 2 பேர் கைது
வேலூர்: வேலூரில் 2 பேர் மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் பிடித்து அதில் இருந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி நான்கு வழிசாலை வழியாக ஒரு கார் வேகமாக வந்துள்ளது. அந்த கார் பங்கலாமோடு என்ற இடத்தை கடந்து செல்கையில் முன்னால் சென்ற சைக்கிள் மற்றும் பைக் மீது மோதியது. இதில் சைக்கிளில் சென்ற பொத்தப்பன், பைக்கில் சென்ற லிங்கப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆனால் அந்த காரோ நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் பற்றி நாட்றாம்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்து காரின் அடையாளங்களையும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடிக்கு போன் செய்து விபத்தை ஏற்படுத்திய காரின் அடையாளங்களை கூறி அதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்தனர்.
போலீசார் தெரிவித்த அடையாளங்களுடன் வந்த காரை சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் அந்த காரை பறிமுதல் செய்து அதில் இருந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் யார், எங்கு சென்றார்கள், எதற்காக விபத்தை ஏற்படுத்தியும் நிற்கவில்லை என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications