ஆஞ்சநேயர் ஜெயந்தி: ஜெ. சார்பில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 100008 வடைமாலை சாற்றி வழிபாடு
நாமக்கல்: ஜெயந்தியை முன்னிட்டு புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் ஒரு லட்சத்து எட்டு வடை மாலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது. இந்த மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அணிவிக்கப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மார்கழி மாதம் மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னம், அமாவாசை திதியில் அனுமன் அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அன்றைய தினம் ஆண்டு தோறும் அனுமர் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எல்லா விஷ்ணு தலங்களிலும் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சந்நதி இருக்கும். இது தவிர ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனிக்கோயில்களும் உள்ளன. தமிழகத்தில் எங்கு நோக்கினும் விநாயகர் கோயில் இருப்பதைப் போல வடஇந்தியாவில் அனுமனுக்கு அதிக ஆலயங்கள் உள்ளன.

நாமக்கல் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு விசேஷ தினத்தன்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
இக் கோயிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜயந்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயர் ஜெயந்தி
ஆஞ்சநேயர் ஜெயந்தியான இன்று காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
100008 வடைமாலை
அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னர் சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு 100008 வடைமாலை சாற்றப்பட்டது. இந்த மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் அணிவிக்கப்பட்டதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சுசீந்திரம் ஆஞ்சநேயர்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீராம பிரானுக்கு அபிஷேகமும், காலை 6 மணிக்கு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சாமிக்கு பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், எலுமிச்சை சாறு, பஞ்சாமிர்தம், மாதுளை, பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் அடங்கிய, சோடச அபிஷேகம் நடைபெற்றது.
2லட்சத்து 50 ஆயிரம் லட்டுக்கள்
பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 2 லட்சத்து 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. மாலை 5 மணிக்கு ஸ்ரீராம ஆஞ்சநேயர் குழுவினரின் பஜனையும், 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பா பிஷேகமும், 6.30 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஷ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன், புஷ்பாபிஷேகமும், இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெறு கிறது.
கீழப்பாவூர் ஆஞ்சநேயர்
கீழப்பாவூர் நவநீதகிருஷ்ண பெருமாள், வேணுகோபால கிருஷ்ணசுவாமி, தெப்பக்குளம் நரசிம்மர் கோயில்களிலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி நடக்கிறது. நவநீதகிருஷ்ண பெருமாள் கோயிலில் காலை 9 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது.
சக்தியின் நாயகன்
அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர். பஞ்ச பூதங்களையும் தன் உள்ளடக்கிய ஆஞ்சநேயர் எங்கும், எதிலும் அடங்குவதில்லை. ராமா என்ற இரண்டு எழுத்தில் மட்டும் கட்டுண்டு கிடக்கிறார். தீய சக்திகள், காத்து கருப்பு, பூதபிசாசங்கள், செய்வினை, மனபேதலிப்பு, சகல தோஷ தடைகள் நீங்குவதற்காக பக்தர்கள் ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
சொல்லின் செல்வர்
வாஸ்து கோளாறு உள்ள இல்லங்களில் வீட்டின் வாசல்படியில் அனுமன் படம் வைப்பதால் தோஷ கோளாறுகள் நிவர்த்தியாகின்றன. அனுமனை சொல்லின் செல்வன் என சிறப்பித்துக் கூறுவார்கள். இவரை வணங்குவதன் மூலம் சிறந்த பேச்சாளராக ஆக முடியும். ஜோதிடர்களும், புரோகிதர்களும், ஆசிரியர்களும் வழிபடுவதால் நாவன்மை மேலோங்கும்.
எப்படி வணங்கலாம்
அனுமன் ஜெயந்தியில் அஞ்சேல் என்று ஆசி கூறி அபயம் அளிக்கும் அனுமன் பாதம் பணிவோம். எல்லா தோஷங்கள், தடைகள், தடங்கல்களும் நீங்கி வளமான வாழ்வு பெறுவோம். கல்வியில் தடை, சுணக்கம் நீங்க வெற்றிலை மாலை, குடும்ப ஒற்றுமை, பிரிந்த தம்பதியர் சேர தேங்காய் மாலை, தடைகள் நீங்கி உயர் பதவி அடைய துளசி மாலை, தீராத நோய் தீர வெண்ணெய் காப்பு, குழந்தை பாக்யம் கிட்ட சந்தன காப்பும் மிக முக்கியமான பிரார்த்தனை முறைகளாகும்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications