எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 19 நாகை மீனவர்கள் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை அட்டகாசம்
நாகப்பட்டினம்: கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 19 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
ராமேஸ்வரம், வேதாரண்யம், நாகை, ஜெகதாபட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்டு வரும் நிலையில் மீன்பிடிபடகுகளை வழங்க இலங்கை அரசு மறுக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டை மற்றும் டி.ஆர்.பட்டணத்தை சேர்ந்த 19 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் சென்றனர். அவர்கள் இலங்கை அருகே உள்ள கட்டைக்களம் என்ற பகுதியில் இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 19 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவரவில்லை. நாகை மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கடற்படை பிடித்து சென்ற மீனவர்கள் யார், யார் என்பது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறார்கள்.
மீனவர்கள் கைது சம்பவம் தொடர்வது மீனவ மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications