இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... 29 தமிழக மீனவர்கள் கைது... வவுனியா சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்களில் 9 பேர் மன்னார் சிறையில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களை வரும் 18ம் தேதி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து நேற்று 250 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் மீன்வளம் நிறைந்த கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

Sri Lankan Navy Arrests Thoothukudi Fishermen

இந்நிலையில், இன்று அதிகாலை இலங்கை கடற்படையினர் அப்பகுதியில் குட்டி கப்பல்களில் ரோந்து வந்தனர். அப்போது மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது அவர்கள் கற்கள், பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது, கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளையும் அறுத்து எறிந்து நாசம் செய்துள்ளனர்.

பின்னர் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த அருளானந்தம் என்பவரது படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இன்னாசி ராயப்பன், தவசி, ராஜா ராம், பிரபு, ஆங்கிலின், ராஜ், அந்தோணி, லிங்கம், கிறிஸ்து ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது படகுகளும் சிறைபிடிக்கப்பட்டன.

அங்கிருந்த மற்ற மீனவர்களை அவர்கள் விரட்டி அடித்தனர். இதனால் உயிருக்கு பயந்து மற்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.

கைது செய்யப்பட்ட இந்த 9 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தபட்டனர். அப்போது வரும் மார்ச் 18 வரை அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல், தூத்துக்குடி திரேஸ்புரத்தில் இருந்து 3 நாட்டு படகுகளில் கடந்த 2-ந் தேதி 20 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் தூத்துக்குடியில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தூத்துக்குடி மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து சுரேஷ் (வயது 40), சேவு (40), சுந்தர் (36), பேதுரு (38), ஜோசப் (43), ஜெய்சன் (28), மாயாண்டி (19), பாலமுருகன் (23), உத்தல் (38), வேலு (31), மாடசாமி (38), ரோஸ்டல் (37), கிங்ஸ்டன் (20), தொம்மை (20), அந்தோணிராஜ் (35), கார்வின் (46), வியாகுலம் (46), கிங்ஸ்டன் (30), ரோதை (18), வின்சிபா(30) உள்ளிட்ட 22 மீனவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+