10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வு எழுத வராதவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகிறது.

இந்த ஆண்டு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்கி ஜூலை 6ம் தேதி முடிவடைந்தது.

SSLC supplementary exam result today

இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகிறது. தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு ஜூலை 31 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய இருநாள்களில் நேரில் சென்று உரியக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

TN School Department Announced 2 failed Students Can Apply Through Tadkal | Oneindia Tamil

மொழிப்பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.305, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு தலா ரூ.205, விருப்ப மொழிப்பாடத்துக்கு ரூ.205 என மறுகூட்டலுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
SSLC supplementary exam result will be released today
Please Wait while comments are loading...