For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிலம்பம் சுற்றிய ஸ்டாலின்... கரூரில் மாணவர்கள் உற்சாக வரவேற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கரூர்: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் தி.மு.க. மக்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவையனைத்தும் நிறைவேற்றப்படும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். சிலம்பம் சுற்றிய ஸ்டாலினை மாணவர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை கடந்த 7-ந்தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொடங்கினார். கோவை, ஈரோடு, திருப்பூர், மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த அவர், இன்று கரூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

Stalin does Silmabam in Karur

திருப்பூரில் ஞாயிறன்று ‘நமக்கு நாமே' பயணத்தை நேற்று மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தொழில்துறையினர் மற்றும் விவ சாயிகள் பங்கேற்ற கூட்டத்தில், பேசினார். அப்போது தற்போதுள்ள ஆட்சியின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாக, நீங்கள் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. திமுகவைப் பொறுத்தவரை, தேர்தல் அறிக்கை என்பது ஒரு முறைக்கு பலமுறை ஆய்வு செய்துதான், அறிவிக்கப்படும். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், ஒவ்வொரு தொகுதியின் பிரதானக் குறைகளும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதிரொலிக்கும் என்றார்.

திமுக நிறைவேற்றும்

திமுக ஆட்சியில் செயல்படுத்த இருந்த மின் திட்டங்கள், ஆட்சி மாற்றத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தப் பயணத்தின் வாயிலாக, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் அனைத்தையும், திமுக நிறைவேற்றும் என்றார்.

Stalin does Silmabam in Karur

மக்கள் வரவேற்பு

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொய்யல் கிராமத்தில் இருந்து திறந்த வேனில் புறப்பட்ட அவருக்கு புன்னம் சத்திரம் அருகே பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பலர் கைகுலுக்கி வரவேற்றனர்.

சாயக்கழிவு கலப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சப்பட்டி என்ற இடத்தில் மு.க.ஸ்டாலின் சென்றுகொண்டிருந்த போது, அவரை வழிமறித்த அப்பகுதி மக்கள் தங்கள் ஊரில் உள்ள 950 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியைப் பார்க்க வருமாறு அழைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டாலின் அந்த ஏரியைப் பார்வையிட்டார். அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் காவிரி இருந்தும் குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் அவரிடம் தெரிவித்தனர்.

Stalin does Silmabam in Karur

கால்வாய் திட்டம்

சாயக்கழிவு நீர் செல்வதற்கு குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களையும் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால் ஏற்கனவே ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட கால்வாய் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து தங்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Stalin does Silmabam in Karur

காணொலி காட்சி ஆட்சி

பின்னர் அங்கிருந்து மரவாபாளையம் சென்ற அவர், அங்கு கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரமுகர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். விவசாயிகள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் காணொளி காட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. விவசாயிகள் மட்டு மல்லாமல் எல்லா தரப்பு மக்களும் துன்பப்படுகிறார்கள். விவசாயிகளை பற்றி கவலையோ அக்கறையோ இல்லை.

ஒரே இயக்கம் திமுக

தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் தி.மு.க. மக்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அவையனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார் ஸ்டாலின்.

மகளிருடன் உரையாடல்

அடுத்து உப்பிடமங்கலம் கொங்கு மண்டபத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் கலந்து பேசினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது மு.க.ஸ்டலினிடம் மகளிர் குழுவினர் தங்கள் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.

சிலம்பம் சுற்றிய ஸ்டாலின்

சிலம்பம் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களை சந்திந்துப் பேசிய ஸ்டாலின், தானும் சிலம்பம் சுற்றினார். அப்போது மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

Stalin does Silmabam in Karur

மனு கொடுத்த மக்கள்

பின்னர் காணியாளம்பட்டி சந்தைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு வணிகர்கள், கடைக்காரர்களுடன் வியாபாரம், தொழில் குறித்து கலந்துரையாடினார். அப்போது பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஸ்டாலினிடம் மனுக்களை கொடுத்தனர்.

வாழைத்தோப்பில் உணவு

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் நடைபயணமாக குளித்தலையில் மயிலாடி, நத்தமேடு, வி.புதூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். அந்த பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுடன் மதிய உணவு அருந்தினார். நமக்கு நாமே பயணத்தின் அடுத்த கட்டமாக இன்று இரவு கரூரிலிருந்து நாமக்கல் புறப்பட்டு செல்கிறார் ஸ்டாலின். மொத்தம் 13 மாவட்டங்களில் விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டு வரும் மு.க.ஸ்டாலின் வரும் 18ம் தேதி கடலூரில் 2ம் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார்.

English summary
DMK leader M K Stalin did silambam during his visit to Arvakurichi in Karur district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X