நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி ஹைகோர்ட்டில் ஸ்டாலின் வழக்கு
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சார்பில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
சென்னை: சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நாளை நடைபெறுகிறது.
தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்றார். அவரது அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், எதிரணியாக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தியது.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்தரப்பினரின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மைக் உடைப்பு, மேஜை உடைப்பு, சட்டை கிழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. சபாநாயகர் பிடித்து தள்ளப்பட்டார். அவரது நாற்காலியில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தனர்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.சண்முகசுந்தரம் உயர் நீதிமன்றத்தில் இன்று இதுதொடர்பாக பொறுப்பு நீதிபதி ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் முறையீடு செய்தார். இதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து ஸ்டாலின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த 18ஆம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டவிரோதமானது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சிறைக் கைதிகளைப் போல் பேரவைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் யாரும் மனசாட்சிப்படி வாக்களிக்கவில்லை. கட்டாயத்தின் பேரிலேயே வாக்களித்திருக்கின்றனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நிர்பந்தப்படுத்தப்பட்டிருந்ததாலேயே, ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். திட்டமிட்டே எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார். இது ஜனநாயக மரபு அல்ல. இந்த வாக்கெடுப்பை மக்களும் நிராகரிக்கிறார்கள்.
இது தொடர்பாக ஆளுநரிடமும் முறையிட்டிருக்கிறோம். எனவே, இந்த அரசை கலைத்துவிட்டு மீண்டும் பேரவையில் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். இந்த முறை ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாளை காலை இந்த வழக்கு அவசர வழக்காக முதலில் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications