ஸ்டாலினை வைத்த கண் வாங்காமல் பார்த்த கோ.சி.மணியின் கொள்ளுப்பேரன்! பெயர் சூட்டு நிகழ்வில் ருசிகரம்!
சென்னை: திமுகவின் மூத்த முன்னோடியும், கருணாநிதியின் தளகர்த்தர்களில் ஒருவருமான மறைந்த கோ.சி.மணியின் கொள்ளுப்பேரனுக்கு மதியரசன் என பெயர் சூட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கோ.சி.மணியின் கொள்ளுப்பேரனுக்கு கருணாநிதி என ஸ்டாலின் பெயர் சூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத பெயரான மதியரசன் என சூட்டினார்.

அண்ணா ஒருமுறை தனது சுற்றுப் பயணத்தின் போது, கும்பகோணம் அருகே உள்ள மேக்கிரிமங்கலம் உள்ள கோ.சி.மணி வீட்டிற்கு சென்றார். அப்போது கோசி மணி வீட்டில் இல்லாததால், அவருடைய வயலுக்கே சென்று பணியாற்றிக் கொண்டிருந்த மணியை சந்தித்தார் என்பது வரலாறு.
அதேபோல் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் கருணாநிதி சுற்றுப் பயணம் என்றால், கோ.சி.மணி மேடையில் இல்லாமல் எந்தக் கூட்டத்திலும் உரையாற்றியது கிடையாது.
பொதுக்குழுவிலோ, நிர்வாகிகள் மத்தியிலோ கருணாநிதியை பற்றி யாராவது குறை காண முனைந்தால், அதனை எதிர்த்து ஆவேசத்துடன் முதல் குரல் எழுப்புவது கோ.சி. மணியாகத் தான் இருப்பார்.
இதனால் தான் கோ.சி.மணி மறைந்த போது, ''எனக்கு நண்பராய், மந்திரியாய், நலம் பேணும் சேவகராய் விளங்கியவர் கோ.சி. மணி. கோ.சி. மணி இல்லாத தஞ்சை மண்ணை குண்டுமணியளவும் கற்பனை செய்து பார்க்க எனது குலை நடுங்குகிறதே, என் செய்வேன்?'' என உருக்கமான இரங்கல் விடுத்திருந்தார் கருணாநிதி.

கோ.சி.மணியின் மகன்களும், பேரன்களும் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டாத நிலையில் அவரது கொள்ளுப்பேரனுக்கு மதியரசன் என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார் ஸ்டாலின்.
இதனிடையே பெயர் சூட்டும் நிகழ்வின் போது ஸ்டாலினை வைத்த கண் வாங்காமல் பார்த்த கோ.சி.மணியின் கொள்ளுப்பேரனால் சிரிப்பலை ஏற்பட்டிருக்கிறது.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications