ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசனை சந்தித்த மு.க.ஸ்டாலின் – அரசியல் இல்லையாம்!
சென்னை: தமிழக காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார். மு.க.தமிழரசுவின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்டாலின் அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மு.க.ஸ்டாலின் எங்கள் வீட்டுக்கு வந்ததில் அரசியல் கிடையாது. குடும்ப நண்பர்கள் என்பதால் சந்தித்துக் கொண்டோம். அரசியலில் எங்களுக்கும் அவருக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ஆனாலும் நாங்கள் ஒரே குடும்பம் என்றார்.

ஜெ.வுக்கு தண்டனை உறுதி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீடு தீர்ப்பு எப்படி அமையும் என்ற கேட்டதற்கு பதிலளித்த இளங்கோவன், ஜெயலலிதாவுக்கு கண்டிப்பாக தண்டனை உறுதி செய்யப்படும் என்றார்.

சுருட்டல் அமைச்சர்கள்
ஜெயலலிதா வெளியில் வருவதற்குள், எல்லா அமைச்சர்களும் இருப்பதை சுருட்ட முயற்சிக்கிறார்கள். அதனால்தான் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். இதனால்தான் முத்துக்குமாரசாமி போன்றவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

அனைத்திலும் ஊழல்
இந்தியாவில் அதிக ஊழல் தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. எல்லா துறையிலும் ஊழல்தான். போலீசாரையும், சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கேட்டுக்கொள்வதெல்லாம் இப்போதாவது நீங்கள் நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள் எடுப்படியாக செயல்படாதீர்கள்.

கூட்டணிக்கு அச்சாரமா
மு.க.ஸ்டாலின் சந்திப்பு தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா? என்று கேட்டதற்கு, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது என்று கூற முடியாது. இல்லை என்றும் சொல்ல முடியாது என்று நழுவலாக பதிலளித்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

தலைவர்கள் சந்திப்பு
சில தினங்களுக்கு முன்னர்தான் டாக்டர் கிருஷ்ணசாமி தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து அவர் ஜி.கே.வாசனையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில் சகோதரரின் மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க ஈ.வி.கே.எஸ் இளங்கோவனையும், ஜி.கே.வாசனையும் சந்தித்துப் பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications