'என்னது... ஸ்டாலின் அம்மா உணவகத்துக்குப் போனாரா?' யார் பார்த்த வேலைப்பா இது!
இன்று சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக ஒரு படம் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அதில் அம்மா உணவகத்தின் வாசலில் நின்றபடி, தட்டில் முக ஸ்டாலின் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
முதலில் இது பார்ப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியைத் தந்தாலும், உற்றுப் பார்த்த பிறகுதான் அது ஒட்டுவேலை என்பது புரியும்.

நமக்கு நாமே என்ற தனது புதிய திட்டத்தின் இரண்டாம் கட்டமாக கரூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து கொண்டுள்ளார் ஸ்டாலின். ஆனால் அவர் நிற்பதாகக் காட்டப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் சென்னை மாநகராட்சி பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் சுற்றுப் பயணத்தின்போது, ஏதோ ஒரு கையேந்தி உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிடுவதைத்தான், போட்டோஷாப்பில் அம்மா உணவகமாக மாற்றி யாரோ சமூக வலைத் தளத்தில் பதிந்துள்ளனர்.
இந்த உண்மை புரியாமல், 'ஸ்டாலின் அம்மா உணவகத்தில் சாப்பிடுகிறார். பார்த்தீர்களா.. திமுக - அதிமுக என்று மோதிக் கொண்டாலும், அவர்களுக்கு உள்ளுக்குள்ள ஒரு தொடர்பு இருக்கிறது' என்கிற பாணியில் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர் சிலர். சில அரசியல் பிரபலங்களே கூட இதை நம்பிவிட்டதுதான் வேடிக்கை.

அட, அப்படியே ஸ்டாலின் அம்மா உணவகத்தில் சாப்பிடுவது அவ்வளவு பெரிய தப்பா? அது ஒன்றும் அதிமுகவுக்கான உணவகம் இல்லையே.. மக்கள் அனைவருக்கும் பொதுவானதுதானே... ஒரு சட்டமன்ற உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக ஒரு அம்மா உணவகம் இயங்குவதை ஆய்வு செய்யும் அதிகாரம் ஸ்டாலினுக்கு உண்டல்லவா!
நமது பார்வை, எதையும் குதர்க்கமாக நோக்கும் மன ஊனம் மாறாதவரை, நம்ம அரசியலும் மாறப் போவதில்லை!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications