கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆக ஸ்டாலின் குமாரசாமியிடம் பேச வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன் அடடே!
கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆக ஸ்டாலின் அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் பேச வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை: கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் ஆக ஸ்டாலின் அம்மாநில முதல்வர் குமாரசாமியிடம் பேச வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னால் பாஜக இருப்பதாக தமிழ் தேசிய அமைப்புகள் குற்றம்சாட்டின. அதற்கேற்றார் போலவே ரஜினி எதை கூறினாலும் தமிழக பாஜக தலைவர்கள் அதனை வழிமொழிகிறார்கள்.

காலா பட விவகாரம்
இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கர்நாடகாகவில் காலா திரைப்படத்தை வெளியிட முடியாது என குமாரசாமி கூறியதை நினைவு கூர்ந்தார்.

ரஜினிக்காக பேசவில்லை
மேலும் அவர் பேசியதாவது, எப்படி தமிழகத்திற்கு காவிரி நீரை தரமுடியாது என்று கூறினார்களோ அதே போல் காலா படத்தை வெளியிட முடியாது என்கிறார்கள். ரஜினிக்காக நான் பேசவில்லை.

குமாரசாமியிடம் பேச வேண்டும்
ஒரு தமிழ் படத்திற்காக பேசுகிறேன். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸின் கூட்டணியில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட குமாரசாமியிடம் போனிலோ அல்லது தேவைப்பட்டால் நேரிலோ பேச வேண்டும்.

எதுவும் செய்யவில்லை
காலா படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆக ஸ்டாலின் உதவ வேண்டும். தமிழுக்காக திமுக எதையுமே செய்யாத நிலையில் தமிழ் படத்திற்காவது செய்யட்டும். இனியும் திமுக பாசாங்கு செய்யக்கூடாது.

காவிரியில் நீர் திறக்க
காவிரி நீரை திறக்க கர்நாடக அரசிடம் திமுக என்றுமே கோரிக்கைவிடுத்தது இல்லை. கர்நாடகாவில் காங். கூட்டணி அரசிடம் காவிரியில் நீர் திறக்க ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும்.

எஸ்விசேகர் விவகாரம்
காவிரி விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் அதன் கடமையில் இருந்து தவறக்கூடாது. எஸ்.வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

துரோகம் செய்துவிட்டார்கள்
அரசுக்கு எதிராக பேசுவதில் தவறில்லை, ஆனால் புரட்சி செய்யும் நோக்கில் சிலர் செயல்படுகின்றனர். தமிழனை உயர்த்துவதாக கூறியவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள். இவ்வாறு மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications