தமிழ்நாட்டில் வக்கற்ற, திக்கற்ற நிலையில் ஆட்சி நடைபெறுகிறது - ஸ்டாலின்
தமிழகத்தில் திக்கற்ற, வக்கற்ற ஆட்சி நடைபெறுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அரசு விழாவிற்கு அழைத்து செல்வது தொடர்கதையாகிறது என்று குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின், வக்கற்ற ஆட்சி ஆட்சி நடைபெறுவதாக கூறியுள்ளார்.
கரூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பங்கேற்கிறார். அதற்காக அவர் அங்கு பயணம் செய்வதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சியில் இருந்து மணப்பாறை, அரவக்குறிச்சி வழியாக கரூருக்கு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. கடந்த சனிக்கிழமை சேலத்தில் நடந்தது போன்று தற்போது கரூர் நகரமே முதல்வரின் வருகையால் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்ட ஊழியர்கள் எடப்பாடி பழனிசாமி விழாவுக்காக அலைக்கழிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் முதல்வர் விழாவுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 100 நாள் ஊதியத்துக்கான தொகை மட்டுமின்றி கூடுதல் பணம் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சிகளை விமர்சனம் செய்யவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படுகிறது என்றார்.
கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்களை கட்டாயப்படுத்தி அரசு விழாவிற்கு அழைத்து செல்வது தொடர்கதையாகிறது. பள்ளிகளை கட்டாயப்படுத்தி மூடியது பற்றி தலைமை செயலர் விளக்கம் தரவேண்டும் , அவ்வாறு விளக்கம் அளிக்காவிட்டால் வழக்கு தொடருவேன்.
தமிழ்நாட்டில் எதற்கும் திக்கற்ற, வக்கற்ற ஆட்சியே நடைபெறுகிறது. 100 நாள் வேலைக்கு செல்லும் பொதுமக்களை கட்டாயப்படுத்தி விழாவிற்கு அழைத்து செல்கின்றனர் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications