பெங்களூரு வழக்கை முன்வைத்து.. ஜெ.வுக்கு ஸ்டாலின் சொன்ன குட்டிக் கதை
திருவண்ணாமலை: பெங்களூருவில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் இரண்டு மாணவர்களை முன்வைத்து குட்டிக் கதை ஒன்றை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்த முப்பெரும் விழா மற்றும் தேர்தல் நிதியளிப்பு, பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக முதல்வர் அம்மையாரின் கவனமெல்லாம் இப்போது பெங்களுருவில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கின் மீது தான் உள்ளது.

உலகிலேயே வினோதம்
உலகத்தில் தன் வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அரசு வழக்கறிஞர் இன்னார் தான் இருக்க வேண்டும் என கேட்கும் அவலம் இங்கு தான் உள்ளது.

கதையை 'படிக்காமல்' சொல்லுவேன்..
அம்மையார் பேச தொடங்கினால் கதை படிப்பார். கதை என்பது சொல்வதற்கு ஆனால் இவர் படிப்பார். அவரைப்போன்று நான் கதை படிக்கமாட்டேன் சொல்கிறேன்.

மாணவர்கள் கதை
இரண்டு மாணவர்களின் வீடும் எதிர் எதிரே இருந்தது. அதில் ஒருவன் நல்லவன், மற்றொருவன் கெட்டவன். நுல்லவன் ஒழுங்காக படிப்பான், அதிக மதிப்பெண் பெறுவான். கேட்டவனோ ஊரை சுற்றுவது, வீண் வம்புக்கு போவது, சரியாக படிக்காதது இதனால் மதிப்பெண் குறைவாக பெறுவான். நல்லவனை முந்த வேண்டும் என்பது கெட்டவனின் எண்ணம். ஆனால் அது அவனால் முடியவில்லை. அதனால் அவன் அந்த பள்ளியின் தலைமையாசிரிடம் டியூஷன் சென்றான். தலைமையாசிரிடம் டியூஷன் சென்றால் அந்த பள்ளியின் ஆசிரியர்கள் கெட்ட மாணவனுக்கு அதிக மதிப்பெண் தர தொடங்கினார்கள். ஆவன் நல்ல மாணவனை விட அதிக மதிப்பெண் பெற்றுக்கொண்டு இருந்தான். காலாண்டு, அரையாண்டு தேர்விலும் முதல் மாணவனாக அந்த கெட்ட மாணவன் வந்தான்.
பொது தேர்வு வரும் போது தலைமையாசிரியர் ஓய்வு பெற்றுவிட்டார். உடனே கெட்ட மாணவன் அவர் ஒய்வு பெற அனுமதிக்கமாட்டேன் என சத்தமிட்டான். இது அம்மையாருக்கு நாம் சொல்லும் கதை. இந்த கதை பெங்களுரு சொத்து குவிப்பு வழக்குக்கான கதை.
இந்த கதையில் உள்ள கெட்ட மாணவனை போன்று தான் அம்மையார் செயல்படுகிறார் என்றார்.

தேர்தல் நிதி 7,07,77,777
திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் முன்னால் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ 7கோடியே 7 லட்சத்துக்கு 77 ஆயிரத்து 777 ரூபாய் தேர்தல் நிதியாக தந்தார்.

பிரம்மாண்ட கூட்டம்
திருவண்ணாமலை முப்பெரும் விழா கூட்டத்துக்கு சுமார் 50ஆயிரம் திரண்டிருந்ததாக கூறப்படுகிறது.
-
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications