டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர்களுடன் புழல் சிறையில் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை: டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி போராட்டத்திற்கு தனது ஆதரவு உண்டு என்று தெரிவித்தார்.
சென்னை, அமைந்தகரையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் இணைந்து மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாரிங்டன் சாலை செனாய் நகரில் இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். சிலர், கடை மீது கற்களை வீசி தாக்கினர். அப்போது மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். போராட்டத்திற்கு ஆதரவு அளித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளும் போலீசாரின் பூட்ஸ் கால் உதைக்கு தப்பவில்லை. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 மாணவிகள் உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர். கொலை மிரட்டல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உட்பட 9 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 15 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், புழல் சிறைக்கு இன்று சென்ற திமுக, பொருளாளர் ஸ்டாலின், மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். மாணவர்கள் போராட்டத்திற்கு தனது போராட்டம் உண்டு என்று கூறிவிட்டு வந்தார். மாணவர்களை உடனடிய.ாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications