பணப்பறிமுதல் விவகாரம்: வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் ஆணையம் வழிகாட்ட வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: தேர்தல் நேரத்தில் பணப்பறிமுதல் விவகாரத்தில் வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளால் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று வணிகர் சங்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

வியாபாரிகள் பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை ஆங்காங்கே பறிமுதல் செய்து விடுவதால் வர்த்தகமே நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது என்றும், இதுவரை 30 சதவீதத்திற்கு மேல் மொத்த வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வணிகர் சங்கங்கள் முறையிட்டுள்ளன. சுமார் 1,200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் தினமும் பாதிப்பட்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை முறியடிக்கப் பட வேண்டியதுதான் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும், ஆளுங்கட்சியினர் ஆங்காங்கே தொகுதிகளில் பதுக்கி வைத்துள்ள பணங்களைக் கூட பறக்கும் படை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் வியாபாரிகள் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுமாறு பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அனைத்து வியாபாரிகளுமே வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்ல முடியாது. சில வியாபாரிகள் கடன் வாங்கிக் கூட வியாபாரம் செய்வார்கள். அது போன்ற வியாபாரிகள் சிறிய அளவில் பணத்தை வியாபாரப் பொருட்களை வாங்க எடுத்துச் செல்லும் போது அதையும் பறிமுதல் செய்து மூன்று தினங்கள், நான்கு தினங்கள் வைத்துக் கொண்டால் அந்த வியாபாரியின் குடும்பமே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் ஆபத்து இருக்கிறது.
வியாபாரிகள் என்பது உறுதியாகி விட்டால் அவர்கள் சொற்ப அளவில் எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்யும் போது பறக்கும் படையினர் கவனமாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். குறிப்பாக அவர்கள் வைத்துள்ள பணம் உரிய ஆவணங்களுடன் இருந்தால் அந்தப் பணத்தை உடனே அந்த இடத்திலேயே திருப்பிக் கொடுத்து விட்டுச் செல்லுமாறு பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். முடிந்த வரைக்கும் வியாபாரிகளை பாதிக்கும் வகையில் இந்த பறக்கும் படையின் செயல்பாடுகள் இருக்காதவாறு தேர்தல் ஆணையம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இந்த முறை தேர்தல் கால அவகாசம் அதிகமாக இருப்பதால், இந்த காலகட்டம் முழுவதும் வியாபாரிகளுக்கு இப்படியொரு தொல்லை நேர்ந்தால் அவர்களது வியாபாரம் மட்டுமின்றி, தமிழகத்தில் ஒட்டுமொத்த வர்த்தகமே மோசமாக பாதிக்கப்படும்.
ஆகவே வியாபாரிகள் பணம் பறிமுதல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி, வியாபாரிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் வியாபாரிகளுக்கு சலுகை வழங்குகிறோம் என்று கூறி பறக்கும் படை அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் எடுத்துச் செல்லும் பணத்தை கண்டு கொள்ளலாமல் இருந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். வியாபாரிகளின் பணம் பறிமுதல் பிரச்சினை தொடர்பாக அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications