எங்களால கேன்சர் வராது.. ரஜினிக்கு ஸ்டெர்லைட் விளக்கம்!

ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பாதிப்பு இல்லை என்று ரஜினிக்கு நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பாதிப்பு இல்லை என்று ரஜினிக்கு நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் , குமரரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்காக அவர்கள் கடந்த 49 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலையால் கேன்சர், தோல் நோய், மூச்சு திணறல் உள்ளிட்டவை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில அரசுக்கு கண்டனம்

இந்நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஸ்டெர்லைட் போராட்டத்தை மாநில அரசு வேடிக்கை பார்க்கிறது. அந்த நிறுவனத்தால் உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு என்ற போது அந்த தொழிற்சாலைக்கு மாநில அரசு அனுமதி வழங்கியது ஏன் என்று தெரியவில்லை.

ஸ்டெர்லைட் நிர்வாகம்

நிறுவனத்துக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என்று ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் ரஜினிக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் டுவிட்டரில் பதில் அளித்துள்ளது.

தவறான தகவல்

தவறான தகவல்


காப்பர் குறித்த விளக்கங்களை ஸ்டெர்லைட் நிறுவனம் ரஜினிக்கு அளித்துள்ளது. அதில் எங்களது நிறுவனம் பற்றி உங்களுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பொய்யான தகவல்களை யாரோ உங்களுக்கு அளித்துள்ளார்கள்.

20 ஆண்டுகளாக

20 ஆண்டுகளாக

வாழ்க்கை முறை மாற்றமே புற்றுநோய் வர காரணம் என பல்கலை ஆய்வுகள் கூறுகின்றன. காப்பரால் கேன்சர் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் இல்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள 1 .கி.மீ .சுற்றளவில் 20 ஆண்டுகளாக மூத்த நிர்வாகிகள் வசித்து வருகின்றனர்.

ஆய்வுகள் கூறுவது என்ன

ஆய்வுகள் கூறுவது என்ன

சென்னை , காஞ்சிபுரம், கோவை,குமரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டத்தில்தான் புற்றுநோய் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன என்று அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+