ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 57-வது நாளாக தொடரும் கிராம மக்கள் போராட்டம்- மாணவர்கள் தர்ணா!
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரும் போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. மக்களின் போராட்டம் இன்று 57வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது செயல்பட்டு வரும் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று 57வது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

அ.குமரெட்டியாபுரம் கிராமமக்களின் தொடர் போராட்டத்தையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை அருகே உள்ள மற்ற கிராமங்களான பண்டாரம்பட்டி, சில்வர்புரம், சங்கராப்பேரி, மடத்தூர், மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம் ஆகிய கிராமங்களிலும் மக்களும் போராடி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன் தினம் முதல் தூத்துக்குடி தபால் தந்தி காலனி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டு இடங்களில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில், தூத்துக்குடியில் உள்ளசில தனியார் மகளிர் கல்லூரிகளின், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்கள். தூத்துகுடி மாவட்ட வழக்கறிஞர்களும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications