தீபாவளி புறக்கணிப்பு.. சங்கரன்கோவில் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
தென்காசி: சங்கரன்கோவில் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்து ஐந்து கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி அரசுக்கு எதிராக விளம்பர பலகை வைத்து எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம், வடமலாபுரம், ஈச்சம்பொட்டல் புதூர் ஆகிய கிராமஙகள் அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரமடைந்த ஐந்து கிராம மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை புறக்கணிப்பு செய்து கல்குவாரி வேண்டாம் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து கிராமங்களில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
ஐந்து கிராமங்களில் கல்குவாரிக்கு எதிராக கருப்பு கொடி கட்டி தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை புறக்கணித்து வருவதால் காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
