எஸ்.வி சேகரைக் கைது செய்க.. வள்ளுவர் கோட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
எஸ்.வி சேகரைக் கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

சென்னை : பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பிய எஸ்.வி சேகரை கைது செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக கருத்து ஒன்றை பதிந்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து அந்தப் பதிவை நீக்கினார்.

ஆனால், இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முயற்சி எடுத்த நிலையில், எஸ்.வி சேகர் தலைமறைவானார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமின் கேட்டு எஸ்.வி சேகர் தாக்கல் செய்திருந்த மனு மீது நடந்த விசாரணையில், எஸ்.வி சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து போலீஸாருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், அவரை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், எஸ்.வி சேகரை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெறவும் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications