லுக்கேமியாவால் உயிருக்குப் போராடும் வித்யா... நிச்சயம் ‘உங்களால்’ காப்பாற்ற முடியும்!
சென்னை: லண்டன் மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இளம்பெண்ணான வித்யாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தன் உயிரைக் காப்பாற்றும் வகையில் ஸ்டெம் செல் தரக்கூடிய நபருக்காக காத்துக் கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் வித்யா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் வித்யா (24). கிழக்கு லண்டன், வோல்தம்ஸ்ரோ பகுதியில் வாழ்ந்து வந்த வித்யா, லூக்கேமியா என்னும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ மாணவியான வித்யா, தற்போது லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக வித்யாவுக்கு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆனால், இதுவரை யாருடைய ஸ்டெம் செல்லும் அவருக்கு பொருந்தவில்லை. இதனால் இரண்டு மாதங்கள் தான் வித்யாவால் இனி உயிர் வாழ முடியும் என மருத்துவர்கள் கை விரித்து விட்டனர்.
இதனால், தனக்கான உறுப்பு தானம் செய்யும் நல்ல உள்ளம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் வித்யா. இவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த வீடியோ மற்றும் செய்தி மூலம் வித்யாவிற்கு உதவக் கூடிய நபர் கிடைக்கலாம் என்ற நல்லெண்ணத்தில், இதனை சமூகவலைதளப் பக்கங்களில் மக்கள் பரப்பி வருகின்றனர்.
வித்யாவின் இரத்த மாதிரிக்கு பொருந்தக்கூடிய ஸ்டெம் செல்லைத் தானம் கொடுக்கக்கூடியவர்கள் இங்கிலாந்தில் இருந்து 0303 303 0303 என்ற இலக்கத்திற்கும் வெளி நாட்டவர்கள் 0044 303 303 0303 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், வித்யாவுக்கு தானம் செய்ய விரும்புவோருக்கு, மேற்கு லண்டனில் உள்ள St Anselm's Catholic Church, The Green, Southall, UB2 4BE என்ற முகவரியில் அமைந்துள்ள நிலையத்தில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications