For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாத்திரம் கழுவு.... கழிவறை சுத்தம் செய் - மாணவர்களை வேலை வாங்கும் ஆசிரியர்கள்

பள்ளிக்கு படிக்க அனுப்பினால் சமையல் பாத்திரங்களை கழுவவும், கழிவறை சுத்தம் செய்யவும் ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை படிக்க விடாமல் பாத்திரம் கழுவ வைத்து சமையலறை, கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்தும் ஆசிரியர்கள் வேலை வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகிலுள்ள சோபனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு சமையல் பாத்திரங்களை கழுவ வைப்பது, மாணவ, மாணவிகளிடம் துடைப்பத்தை கொடுத்து வகுப்பறைகள் மட்டுமின்றி பள்ளி வளாகங்களையும் கூட்ட செய்ய வைப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Students Asked To Clean School Toilet With Mid-Day Meal Plates

குடிநீர் மேல் நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வைப்பது என படிக்கும் குழந்தைகளை படிக்கவிடாமல் தொந்தரவு செய்துவருகின்றனர்.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் 200 க்கும் மேற்பபட்ட மாணவர்கள் படித்துவந்த நிலையில் தற்பொழுது 60 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

இங்கு படிக்கும் மாணவ மாணவிகளை வேலை செய்ய வைப்பதால் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி தொலைவிலுள்ள காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, காரிமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் தங்கவைத்து படித்துவருகின்றனர்.

இந்நிலையில் இங்கு படித்துவரும் குழந்தைகள் பள்ளிக்கு தாமதமாகவோ அல்லது விடுமுறை எடுத்தாலோ அவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து அந்த பணம் செலுத்தும்வரை வகுப்பறையில் சேர்க்காமல் வெளியிலேயே நிற்கவைப்பதாக மாணவர்கள் கூறப்படுகிறது.

மேலும் பள்ளி பாட புத்தங்களை எடுத்து வர வண்டி வாடகை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தலா 50 ரூபாய் வீதம் வசூல் செய்து வருகின்றனர். ஆசிரியைகள் கழிவறைக்கு செல்ல தண்ணீர் ஊற்றுவதும் அவர்கள் சென்று வந்த பின்னர் அவைகளை சுத்தம் செய்வதும் நாள்தோறும் நடந்துவரும் மிகப்பெரிய அட்டுளியமாக உள்ளது.

English summary
Students of a government school at a village in Krishnagiri district were allegedly made to clean a toilet using their mid-day meal utensils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X