For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டை: பள்ளி மாணவர்களுக்குள் மோதல்- 3 பேர் படுகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

செங்கோட்டை: செங்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையில் 100ஆண்டு பழமை வாய்ந்த எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்தப் பள்ளியில் செங்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 1500மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் கடந்த சில மாதங்களாகவே மாணவர்களுக்குள் ல்வேறு காரணங்களுக்காக மோதல் ஏற்ப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் ப்ளஸ் டூ வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் கபடி போட்டி நடைப் பெற்றுள்ளது. அப்போது இருபிரிவு மாணவர்கள் விளையாடியதில் ஒருபிரிவு மாணவர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று இந்த மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் சில மாணவர்களை தற்காலிக இடை நீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது நேற்று ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக இருபிரிவு மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு சாராமரி தாக்குதல்கள் பள்ளிவளாகத்தில் உருவாகியுள்ளது.

இதனை சற்றும் எதிர் பாராத ஆசிரியர்கள் உடனடியாக காயம் பட்ட மாணவர்கள் ஜாபர் அலி,ரஹீம்,அசரப் அலி,ஆகியோரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முகம்மது மீரான்,மசூது,ஆகிய இருமாணவர்கள் இலேசான காயம் அடைந்தனர். இந்த தகவல் காவல் துறைக்கு தெரிய வரவே உடனடியாக தென்காசி துணை கண்காணிப்பாளர் அரவிந்தன்,

இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி,முனீஸ்வரன்,உள்ளிட்ட ஏராளமானோர்கள் திரண்டுவந்தனர். மற்றொரு தரப்பை சார்ந்த அப்பகுதியில் வசிக்கும் சிலரும் அடிபட்ட மாணவர்களுக்காக பள்ளி வளாகத்திற்குள் திரண்டு

வந்தனர். அதே சமயம் சில மாணவர்களுக்காக பாஜக பிரமுகர் ஒருவரும் வரவே பிரச்சனை பெரிதாகியது. திடீர் என அடிபட்ட மாணவர்கள் தரப்பினர் பள்ளிமுன் பஸ்மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதனப் படுத்தி தவறு செய்தவர்கள் மீதுவழக்கு பதியப்படும் என்று உறுதி கொடுக்கவே அவர்கள் பஸ் மறியலை கைவிட்டு விட்டு பள்ளிக்குள் சென்றனர்.

Students clash in Senkottai school

பின் மாணவர்களிடமும்,தலைமை ஆசிரியர் பன்னீர் செல்வத்திடமும், துணைக் கண்காணிப்பாளர் அரவிந்தன் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினார். இருபிரிவு மாணவர்கள் மோதல் சம்பந்தமாக 10மாணவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். மாணவர்களுக்குள் காதல் காரணமாக ஏற்ப்பட்ட மோதல்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரே பள்ளியில் ப்ளஸ்டூ வகுப்பு படிக்கும் மாணவர்கள் மோதல் காரணமாக சுமார் இரண்டு மணிநேரம் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் நிலவியது. அனைத்து மாணவர்களும் பள்ளி வகுப்பறைக்குள்ளேயே அமரவைக்கப் பட்டனர்.

English summary
Group of students indulged in clash in a famous school in Senkottai. 3 were injured and police teams rushed to the spot and pacified the students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X