காசு இல்லாததாலதானே அரசுப் பள்ளியில் படிக்கிறோம்.. இசபெல்லா மாற்றத்தை எதிர்க்கும் மாணவர்கள் குரல்!
காசு இல்லாததால் தானே நாங்கள் அரசு பள்ளியில் படிக்கிறோம் என இசபெல்லா ஜூலி டீச்சரின் மாற்றத்தை மாணவர்கள் எதிர்க்கின்றனர்.
நாகை: காசு இல்லாததால் தானே நாங்கள் அரசு பள்ளியில் படிக்கிறோம். நல்லா சொல்லி கொடுக்கும் டீச்சரை மாற்றினால் நாங்கள் எப்படி படிப்பது என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் 1939-ஆம் ஆண்டிலிருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இங்கு பணியாற்றி வரும் இசபெல்லா ஜூலியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டது.

பாச பிணைப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் டீச்சரை கட்டிக் கொண்டு அழுதது காண்போரை நெகிழ வைத்தது. இசபெல்லா டீச்சரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றாக பாடம் நடத்தும் டீச்சர்
இதுகுறித்து அந்த மாணவர்கள் கூறுகையில், மாணவர்கள் குறைந்த நிலையில் இருக்கும் போதும் இசபெல்லா ஜூலி டீச்சர் நன்றாக சொல்லிக் கொடுக்கிறார். அதனால்தான் நாங்கள் படிக்கிறோம். தற்போது டீச்சரை குறைத்தால் நாங்கள் எப்படி படிப்பது.

பாடம் நடத்தும் ஆசிரியர்
எங்கள் பெற்றோரிடம் பண வசதி இல்லாததால் நாங்கள் அரசு பள்ளியில் படிக்கிறோம் என்றனர். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில் ஆட்குறைப்பு என்ற பெயரில் ஆசிரியரை இடமாற்றம் செய்கின்றனர். இந்த ஆசிரியர் நன்றாக பாடம் நடத்துகிறார்.

டீச்சரை மாற்றாதே
அவரை மாற்றக் கூடாது. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதற்காகவே அரசு இதுபோன்ற இடமாற்றத்தை செய்கிறது என்றனர். இதையடுத்து மாற்றாதே மாற்றாதே எங்கள் டீச்சரை மாற்றாதே ... என மாணவர்கள் கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
மிரட்டும் மின்வெட்டு.. நள்ளிரவு நடுத்தெருவில் போராடிய சென்னை மக்கள்.. நழுவிய அதிகாரிகள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications