சொல்லாமல் ட்ரெக்கிங் சென்ற சுபா.. திரும்பாமலே போயிவிட்டார்.. கதறியழுத குடும்பத்தினர்!
குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தெரியவந்துள்ளது.
Recommended Video

கடலூர்: குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த திட்டக்குடி சுபா தனது குடும்பத்தினரிடம் சொல்லாமல் ட்ரெக்கிங் சென்றது தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு 36 பேர் வரை சென்றனர். அவர்களுள் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். நேற்றைய தினம் அங்கு காட்டுத் தீ மளமளவென பற்றி எரிந்தது.
இந்த தீயில் சிக்கி சென்னையை சேர்ந்த அகிலா, பிரேமலதா, புனிதா, சுபா, அருண், விபின், சுபா ஆகிய 7 பேரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஜயா, விவேக், தமிழ்ச் செல்வி ஆகிய 3 பேரும் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.

திட்டக்குடி சுபா
தீவிபத்தில் பலியானவர்களில் சுபா என்ற பெண் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. சுபாவின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் திட்டக்குடியாகும்.

சுபா உயிரிழப்பு
இவரது தந்தை பெயர் செல்வராஜ். சுபாவுக்கு கமல்ராஜ் என்ற சகோதரரும் உள்ளார். சுபா உயிரிழந்தது பற்றிய தகவல் அவரது குடும்பத்தினருக்கு இன்று காலையில்தான் தெரிய வந்தது.

ஊரே திரண்டு கதறியது
இதனைக் கேட்டதும் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறினர். இன்று மாலை சுபா உடல் திட்டக்குடி வந்தது. அப்போது ஊரே திரண்டு நின்று கதறி அழுதனர்.

தவித்த சகோதரர்
சுபாவின் மரணம் தொடர்பாக அவரது சகோதரர் கமல்ராஜை கேட்டபோது எதுவும் பேச முடியாமல் தவித்தார். பின்னர் அழுதபடியே அவர் கூறும்போது, எப்படி யார் மூலமாக எனது சகோதரி சென்றார் என்பதே தெரியவில்லை என்று கதறினார்.

தோழிகளுடன் ட்ரெக்கிங்
தொடர்ந்து பேச முடியாமல் அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை துயரத்தில் ஆழ்த்தியது. மலையேற்ற பயிற்சியில் ஆர்வம் கொண்ட சுபா தனது தோழிகள் சிலருடன் தேனி மலைப் பகுதிக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications