சன் டிவி விற்பனைக்கல்ல...!
சென்னை: கலாநிதிமாறனின் சன்டிவி நெட்ஒர்க் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று மறுப்பு வெளியிட்டுள்ளார் சன்டிவி குழும சி.எப்.ஓ எஸ்.எல்.நாராயணன்.
தென்னிந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி குழுமத்தையே ஒட்டு மொத்தமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்க உள்ளதாக தெஹல்கா இணையதளம் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.

இதனால் பரபரப்படைந்த நிறுவனத்தின் சி.எப்.ஓ நாராயணன், சன் சன்டிவி நெட் ஒர்க் விற்பனை செய்யப்பட்டதாக வந்த தகவல், பொய்யானது என்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஒரு வதந்தி எப்படி வெளியானது என்றே தெரியவில்லை. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். இதுபற்றி எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இதுபோன்ற ஒரு தகவலை வெளியிடும் முன் எங்களிடம் விசாரித்து எழுதியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் சொல்வது என்ன?
இந்த தகவலை ரிலையன்ஸ் நிறுவனமும் மறுத்துள்ளது. மார்ச் 20ம் தேதி வெளியான தெஹல்கா இதழில், சன்டிவி நிறுவனத்தினை ரிலையன்ஸ் வாங்கப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விற்பனை செய்தி தொடர்பாக மும்பை பங்குச் சந்தையிலிருந்து ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு தகவல் போனது. அதற்கு ரிலையன்ஸ் பதில் அளித்துள்ளது. அதி்ல், டெஹல்கா இணையதளத்தில் வந்துள்ள செய்தி போல எதுவும் நடக்கவில்லை. அந்த செய்தியில் உண்மை இல்லை. இந்த செய்தியை எழுதிய செய்தியாளர் அதுகுறித்த விவரங்களை எங்களிடம் கேட்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications