For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவாதி கொலை வழக்கு: அவிழாத மர்ம முடிச்சுகள்... போலீஸ் விசாரணை வளையத்தில் 8 பேர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சுவாதி கொலை வழக்கில் தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்காக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருடன் மேன்சனில் தங்கி இருந்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த 8 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சுவாதி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை 6 மணிக்கு மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். . இந்தக் கொலை நடந்த அடுத்த சில மணி நேரங்களில் இருந்து தமிழகமே அந்த கொலையைப்பற்றி பேசியது. உலகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தியானது. ஒருவார காலம் இந்த கொலைதான் பேசப்படும் செய்தியானது.

சுவாதி கொலை வழக்கில், ஒருவார தேடுதல் வேட்டைக்குப் பின்னர் தென்காசி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிறந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவாதியின் கொலையில் மர்மங்கள், கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ராம்குமார் கைது

ராம்குமார் கைது

ராம்குமாரை சொந்த ஊரில் போலீசார் கைது செய்த பிறகு, சென்னையில் பத்திரிகை யாளர்களை சந்தித்தார் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன். "இந்த வழக்கில் ஒரே குற்றவாளி ராம்குமார்தான். அவனைப் பிடித்துவிட்டோம்'' என்றவர், சுவாதி மீது ராம்குமார் ஒரு தலைக் காதல் கொண்டிருந்ததாகவும், சுவாதி ஏற்காததால் கொலை நடந்திருக்கும் என்றும் கூறினார்.

ஒருதலைக்காதலா?

ஒருதலைக்காதலா?

ராம்குமார் ஒருதலையாக காதலித்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று மீடியாக்கள் கேட்க, கமிஷனரோ, "விசாரணைக்கட்டத்தில் எதையும் வெளியிட முடியாது என்று கூறினார் கமிஷனர் ராஜேந்திரன்.

ராம்குமார் அப்பாவி

ராம்குமார் அப்பாவி

சுவாதியுடன் பழக முடியாத விரக்தியில்தான் அவரை ராம்குமார் கொலை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. ராம்குமார் ஒரு அப்பாவி என்று கூறி ராம்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் விலகல்

வழக்கறிஞர் விலகல்

ராம்குமாரின் கழுத்தில் உள்ள காயம் ஆறாததால், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ராம்குமாருக்கு ஆதரவாக ஆஜராகியிருந்த வழக் கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, தனக்கு பல்வேறு அழுத்தங்கள் வருவதாக கூறி வழக்கில் இருந்து விலகினார். இதையடுத்து ராம்ராஜ் என்னும் வழக்கறிஞர் ராம்குமாருக்காக ஆஜராகவுள்ளார்.

கண்ணால் கண்ட சாட்சி

கண்ணால் கண்ட சாட்சி

சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தான் என்பதை கண்ணால் கண்ட சாட்சி என்று யாரையும் காவல்துறை அடையாளம் காணவில்லை. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறை வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள நபரை போலவே, சூளைமேடு ஏ.எஸ்.மேன்ஷனில் ஒருவர் தங்கியிருந்ததாக அதன் காவலாளி கோபால் கூறினார். அதன் அடிப்படையில் ராம்குமாரை காவல்துறை கைது செய்தது.

வாக்குமூலம் என்ன?

வாக்குமூலம் என்ன?

சுவாதியை கொலை செய்த தாக காவல்துறையிடம் ராம் குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருப்பவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதாரங்கள் என்ன?

ஆதாரங்கள் என்ன?

சுவாதியை கொலை செய்த தாக காவல்துறையிடம் ராம் குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருப்பவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாதியை கொலை செய்த தாக காவல்துறையிடம் ராம் குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருப்பவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை வளையத்தில் 8 பேர்

விசாரணை வளையத்தில் 8 பேர்

ராம்குமார் கைது செய்யப்பட்ட நாள் முதல் ஏ.எஸ் மேன்ஷனை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ராம்குமாரின் ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள் என 8 பேர் எங்கள் மேன்ஷனில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பார்த்த சாட்சி யார்?

பார்த்த சாட்சி யார்?

சுவாதி கொலையான அன்று காலை 6.15 மணிக்கு ராம்குமார் மேன்ஷனில் இருந்து வெளியே சென்றதை பார்த்ததாக யாராவது கூறுங்கள் என்று போலீசார் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில், ராம்குமாருடன் தங்கியிருந்த நடேசன் என்னும் நபர் வேலைக்கு சென்றுவிட்டு காலை 7 மணி அளவில்தான் அறைக்கு வந்துள்ளார்.

காவலில் எடுத்து விசாரணை

காவலில் எடுத்து விசாரணை

ராம்குமாரை புழல் சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ராமராஜ், பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருக்கும் ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் வழக்கை விரைந்து முடிக்கும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

சுவாதி கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருப்பதாக தனிப்படை போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ஏ.எஸ் மேன்சன் காவலாளி கோபாலிடம் நேற்று விசாரித்தோம். அவரிடம் ராம்குமார் குறித்த கேள்விகளை கேட்டோம். அவருக்கு சரியாக காது கேட்காததால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு வேறு பதிலை சொல்கிறார்.

காவலாளி தகவல்

காவலாளி தகவல்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேன்சனில் காவலாளியாக கோபால் சேர்ந்துள்ளார். பணி நேரத்தில் அவர் அஜாக்கிரதையாகவே இருந்துள்ள தகவல் எங்களுக்கு தெரியவந்துள்ளது. சில கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. தேவைப்பட்டால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

அடித்துச்சொல்லும் போலீஸ்

அடித்துச்சொல்லும் போலீஸ்

இந்த வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், ராம்குமாருக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் வழக்கை திசைதிருப்ப சில தகவல்களை சொல்லி வருகிறார்கள். ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும்.

ஆதாரங்கள்

ஆதாரங்கள்

ராம்குமாருக்கும், சுவாதிக்கும் உள்ள பழக்கம் உள்ளிட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் எங்களிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்று கூறியுள்ளனர்.

ராம்குமார் கழுத்தறுப்பு

ராம்குமார் கழுத்தறுப்பு

சுவாதி பற்றி உணர்ச்சி வேகத்தில் ராம்குமார் எதுவும் வாய் திறந்து விடக் கூடாது.. என்ற அக்கறையினாலேயே ராம்குமாரை பேச விடாமல் செய்யும் யுக்தியாக இந்தக் கழுத்தறுப்பு வேலை நடந்திருக்கிறது என்ற சந்தேகம் ஊரில் பலருக்கும் உள்ளது. போலீசார் தனது மகனின் கழுத்தை போட்டோ எடுத்ததாக ராம்குமாரின் தந்தையும் குற்றம் சாட்டியுள்ளார்.

விலகாத மர்மங்கள்

விலகாத மர்மங்கள்

இந்த வழக்கில் இன்னும் விலகாத பல மர்மங்கள் உள்ளன. சுவாதியின் செல்போனை ராம்குமார் வைத்திருந்ததாக கூறி கண்டுபிடித்துள்ளனர். அந்த செல்போனில் இருந்த விபரங்களைப் பற்றியோ, சுவாதியில் லேப் டாப்பில் இருந்த விபரங்களைப் பற்றியோ இதுவரை எந்த தகவலும் போலீசார் வெளியிடவில்லை.

முத்துக்குமார் யார்?

முத்துக்குமார் யார்?

ராம்குமாரின் குடும்பத்தினரோ, முத்துக்குமாரை தேடி வந்து ராம்குமாரை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். இதுவே இந்த கொலை வழக்கில் பல வித சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சுவாதி கொலையை விட கொலையாளி என்று ராம்குமாரை போலீஸ் கைது செய்து பின்னரே பலவித மர்மங்கள் நிறைந்த வழக்காக மாறியுள்ளது. எனவேதான் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
The city police are upbeat that they have solved Swathi murder case by arresting the suspect, P Ramkumar. However, there are many questions that remain unanswered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X