சுவாதி கொலைக்கு கருத்து- ஒய்.ஜி.மகேந்திரன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சுவாதி கொலை குறித்த பகிர்ந்த தனது கருத்துக்கு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மன்னிப்புக்கோரிய பிறகும் அவருக்கு கண்டனங்கள் தொடர்ந்து வருகின்றன. மர்மநபர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் ஒய்.ஜி. மகேந்திரன் வீட்டிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு பதிவை எழுதியிருந்திருந்தார்.

இறந்த பெண் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அமைதி காக்கிறார்கள் என்றும் ஒரு தலித் பெண் இறந்திருந்தால் அனைவரும் வரிந்துகட்டிக்கொண்டு வந்திருப்பார்கள் என்றும் எழுதப்பட்டிருந்த கருத்தை பகிர்ந்திருந்தார்.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு போலீசிலும் புகார் அளித்தனர். சமூகவலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்ததால், தனது கருத்துக்கு விளக்கம் அளித்து மன்னிப்பும் கேட்டார்.
ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கண்டனங்கள் தொடர்ந்து வருகின்றன. அவரை திட்டி போடப்படும் பதிவுகள் தொடர்கதையாகி வருகின்றன. மர்ம நபர்கள் யாரேனும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவரது வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications