எங்க போச்சு "அந்த" கேசட் .. வலை வீசி அலசும் டிடிவி தினகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் எப்படியாவது வெற்றி வெற வேண்டும் என்ற நோக்கில் டி.டி.வி.தினகரன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு கட்டமாக ஒரு வீடியோ கேசட்டை தேடி வருகிறாராம்.

ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பல முனை போட்டி நிலவி வருகின்றன.

இந்த தேர்தலில் சசிகலா தரப்பைச் சேர்ந்த டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மருது கணேஷ், தேமுதிக சார்பில் மதிவாணன் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

 சசிகலா அதிருப்தி

சசிகலா அதிருப்தி

தமிழகத்தில் பினாமி ஆட்சி, குடும்ப ஆட்சி என்று மக்கள் ஏசி வரும் நிலையில் வேறொருவரை வேட்பாளராக நியமிக்காமல் டி.டி.வி. தினகரனை அறிமுகப்படுத்தியதற்கு அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சசிகலா செம டோஸ் விட்டாராம்.

 ஃபெரா வழக்கு

ஃபெரா வழக்கு

இந்நிலையில் ஜெ.ஜெ. டி.வி. நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டது. இநத வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

 முதல்வர் பதவி

முதல்வர் பதவி

இந்த சூழ்நிலையில் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று வாய்சவடால் விட்டார் தினகரன். அதிமுக துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டதையே மக்கள் விரும்பவில்லை. இந்த நிலையில் ஒருவேளை இவர் எம்எல்ஏ ஆகினால் நிச்சயம் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவார் என்பது நிதர்சனம்.

 மக்களிடம் நன்மதிப்பை பெற...

மக்களிடம் நன்மதிப்பை பெற...

இதனால் தமக்கு எதிராக உள்ள மக்களின் நன்மதிப்பை பெறவும், சசிகலா தரப்புக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை நிரூபிக்கவும் மண்டை பிய்த்துக் கொண்டிருக்கும் டி.டி.வி. தினகரனுக்கு நிர்வாகி ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.

 காசட் தேடல்

காசட் தேடல்

அதாவது, 1999-ஆம் ஆண்டு பெரியகுளம் லோக்சபா தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட டி.டி.வி. தினகரனை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். அந்த வீடியோ காட்சியை இந்த இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தினால், பெண்களின் வாக்குகளையும், அதிமுக அனுதாபிகளின் வாக்குகளையும் பெற்றுவிட முடியும் என்பது யாரோ தூபம் போட்டுள்ளனர்.

 தேடும் பணி

தேடும் பணி

ஆஹா என்று அகமகிழ்ந்த தினகரன் அந்த வீடியோவைத் தேடி வருகிறாராம். தங்களுக்கு சொந்தமான டிவி நிறுவனத்தில் தேடியதில் அந்த குறிப்பிட்ட வீடியோ கேசட் இல்லையாம். 18 ஆண்டுகளுக்கு முந்தைய கேசட் என்பதால் கஷ்டமாக உள்ளதாம். ஆனால் எப்படியாவது தேடி கண்டுபிடித்து விடுமாறு டிடிவி தினகரன் கட்டளையிட்டுள்ளாராம்.

சசிகலா குடும்பம் கடைசியில் கேசட் உதவியைத்தான் நாட வேண்டியிருக்கு பாருங்க!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
T.T.V. Dinakaran searches for video cassettes of Jayalalitha who was done propaganda in Periyakulam Loksabha Constituency for the candidate T.T.V.Dinakaran.
Please Wait while comments are loading...