மாதொருபாகன்... சர்ச்சையில் சிக்கிய நாவல் தலைப்பில் புதிய தமிழ்ப்படம்!
சென்னை: கடும் சர்ச்சையில் சிக்கிய நாவலான மாதொருபாகன் என்ற பெயரில் புதிய தமிழ்ப்படம் ஒன்று உருவாக உள்ளது.
தனது மாதொருபாகன் நாவல் மூலம் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தார் எழுத்தாளர் பெருமாள் முருகன். திருச்செங்கோடு பகுதி பெண்களை கீழ்த்தரமாக சித்தரித்திருப்பதாக எதிர்ப்பு கிளம்ப, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பெருமாள் முருகன், நான் இறந்து விட்டேன். இனி எழுதவே போவதில்லை என அதிரடியாக அறிவித்தார்.
எழுத்தாளனின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதா என பெருமாள்முருகனுக்கு ஆதரவாக பலர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்னதாகவே, மாதொருபாகன் என்ற பெயரை படத்தலைப்பாக்கியுள்ளனர்.
நவீன கூத்துப்பட்டறை சார்பில், ஆதிரா பாண்டிலட்சுமி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். திருச்சி வேலுச்சாமி கதை, வசனம் எழுத, இப்படத்திற்கு இசை வல்லம் அலீம். அண்ணாமலை ராஜா ஒளிப்பதிவு.
பெயர் மட்டும் தான் நாவலுடையது என்றும், படக்கதை நாவலைத் தழுவியது அல்ல என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு சிவபக்தையின் கதையாம். ஆணுக்குச் சமமான அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதைக்களமாம்.
நாவலின் பெயரை தங்கள் படத்துக்கு தலைப்பாக வைப்பது குறித்து பெருமாள் முருகனிடம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான நடவடிக்கைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications