தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பதா? எருமேலியில் திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் திடீர் சாலை மறியல்!
எருமேலி: தமிழ்நாட்டு வாகனங்களுக்கு கேரளாவில் அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி தமிழ்நாட்டின் திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர்கள் எருமேலியில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவின் சபரிமலைக்கு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாநிலங்களில் சென்று திரும்புகின்றனர். கடந்த காலங்களை விட நடப்பாண்டில் சபரிமலைக்கான ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 80,000 முதல் 90,000 பக்தர்கள் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

அதே நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய வசதிகளை கேரளா மாநில அரசு செய்து தரவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. கேரளா அரசைக் கண்டித்தும் அம்மாநில அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. கேரளா உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் வழியில் எருமேலியில் இன்று தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எ.பண்ணைப்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற வாகனத்தை எருமேலியில் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து எருமேலியில் கேரளா அரசு பேருந்தை வழிமறித்து தமிழக பக்தர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஐயப்பனின் சரண கோஷங்களையே முழக்கமாக எழுப்பி இந்தப் போராட்டத்தை ஐயப்ப பக்தர்கள் நடத்தினர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications