பசுமை வீடு திட்டம்.. கட்டுமான செலவு ரூ. 2.10 லட்சமாக உயர்வு.. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: பசுமை வீடு திட்டத்திற்கான கட்டுமான செலவு ரூ. 2.10 லட்சமாக தமிழக அரசின் இந்த பட்ஜெட்டில் உயர்த்தி உள்ளது.
கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டித்தரப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் கட்டித்தருவதற்காக அரசு சுமார் ஆயிரம் கோடி ரூபாக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
இதற்கான மொத்த செலவு தொகை ரூ.2,10,000 ஆக இருக்கிறது. ஒரு வீட்டிற்கான கட்டுமானத் தொகை ரூ. 1,80,000/- சூரிய சக்தி விளக்கிற்கான தொகை ரூ. 30,000, மொத்தம் ரூ. 2,10,000 ஆக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் பசுமை வீடுகளுக்கான கட்டுமானத் தொகையை ரூ. 2,10,000 கோடியாக உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப் பகுதிகளில் வீடு இல்லாத, வீட்டு மனை பட்டா உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.
இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளுக்கு ரூ. 6,754 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications