தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ. 64,208.55 கோடி ஒதுக்கீடு
Recommended Video
சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காக ரூ. 64,208.55 கோடியை பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஒதுக்கி உள்ளார். ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் 2020-21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். அதிமுக அரசின் இரண்டாவது ஐந்தாண்டின் கடைசி பட்ஜெட் என்பதால் நிறைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே இந்த பட்ஜெட்டிலேயே அதிக நிதி ஒதுக்கீடு என்றால் அது அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு தான். தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்துக்காக ரூ. 64,208.55 கோடியை பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஒதுக்கி உள்ளார். ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். பள்ளி கல்வித்துறைக்கு ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். விவசாய துறைக்கு கணிசமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.













Click it and Unblock the Notifications