இது வேறலெவல் பிளான்.. ரெடியாகும் பிரம்மாண்ட ராமேஸ்வரம் ஏர்போர்ட்.. 5 இடங்களை தேர்வு செய்த தமிழக அரசு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்காக இதுவரை ஐந்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தென்தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நான்கு மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த ஐந்து இடங்களிலிருந்து மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்திய விமான நிலைய ஆணையம் சாத்தியக்கூறு அறிக்கை ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், அடுத்த ஆண்டுக்குள் ஒரு இடத்தை அரசு தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ராமேஸ்வரம் விமான நிலையம் அமைக்க சுமார் 700 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஒரு ஓடுபாதையுடன், கோட் சி விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட விமான நிலையத்தை நாங்கள் இங்கே களமிறக்க திட்டமிட்டு உள்ளோம்," என்றார்.
சாத்தியக்கூறு அறிக்கை தயாரானதும், விமான நிலையத்திற்கு உகந்ததா என்பதை ஆய்வு செய்ய, சுற்றியுள்ள கட்டிடங்களின் உயரத்தை ஆராய ஒரு தடையற்ற வரம்பு மேற்பரப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும். ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாடு மட்டுமல்ல, வட இந்தியாவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து மூன்று மணி நேரம் பயணம் செய்து இராமேஸ்வரத்தை அடைகிறார்கள்.
ராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். பலர் முதலில் வாரணாசிக்குச் சென்று, பின்னர் ராமேஸ்வரத்திற்கு வந்து ஆன்மீகப் பயணத்தை நிறைவு செய்கிறார்கள். ராமேஸ்வரத்திற்கு விமான இணைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என்று அப்பகுதி மக்களும் தெரிவிக்கிறார்கள்.
விமான நிலையம் அமைக்கப்பட்டால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும், இது பிராந்தியத்தின் உள்ளூர் பொருளாதாரத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். விமான நிலையம் அருகில் இருந்தால் வணிக சமூகம் புதிய வாய்ப்புகளை ஆராயும், இது நீண்ட கால அடிப்படையில் நிறைய முதலீடுகளை ஈர்க்கும். நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஓசூர் பணிகள் தீவிரம்
அதே சமயம் ஓசூரில் திட்டமிடப்பட்டுள்ள பிரத்யேக விமான நிலையத்தை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தளங்களும் விமான நிலையம் அமைக்க ஏற்றவை என்று முடிவு செய்துள்ளதாக நம்பப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வான்வெளியை மதிப்பிடுவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தடையற்ற வரம்பு மேற்பரப்பு (Obstacle Limitation Surface - OLS) ஆய்வில், இந்த முடிவு வந்துள்ளது.
இதனால் இந்த 2 இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட ஓசூர் விமான நிலையத்திற்காக கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியை நிறுவுவதற்கு ஒப்புதல் கோரி தமிழக அரசு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதாவது இங்கே பயணிகள் விமானம் பறப்பதற்கு ஏற்ப மற்ற விமானங்களை அனுமதிக்காத வகையில் அல்லது அனுமதி பெற்று மட்டும் விமானங்களை இயக்கும் விதமாக கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியை உருவாக்க ஒப்புதல் கோரி தமிழக அரசு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.
வரவிருக்கும் ஓசூர் விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதி கட்டத்தை தமிழக அரசு நெருங்கி வருகிறது. இதையடுத்து தடை வரம்பு மேற்பரப்பு கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் Obstacle Limitation Surface (OSL) surveyஐ மேற்கொள்ள ஆலோசகரை நியமிக்கத் அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த பகுதியில் வனப்பகுதியில் எவ்வளவு பாதுகாப்பானது, பயணிகள் விமானங்கள் செல்ல எவ்வளவு பாதுகாப்பு என்பதை சர்வே எடுக்கும் சோதனை ஆகும் இது.
சமீபத்தில்தான் பெங்களூர் விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஃபேர்ஃபாக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டு உள்ளார். பெங்களூர்விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரேம் வாட்சாவும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். ஓசூர் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக Fairfax நிறுவனத்துடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்தது.
சமீபத்தில்தான் ஜிஎம்ஆர் செஸ் நிலத்தில் அல்லது டாடா எலக்ட்ரானிக்ஸ் கிராமம் அல்லது தனேஜா ஏரோஸ்பேஸ்+ அருகே ஓசூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த வாரம் வர உள்ளதாம். ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான வரைவு சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இரண்டு தளங்களை ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications