Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ் டிக்கெட் கட்டணங்கள் அதிரடி உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்!

அரசு பேருந்துகளின் கட்டணத்தை அதிரடியாக அரசு உயர்த்தியுள்ளது. சாதாரண பேருந்துகளுக்கு 5 ரூபாயில் இருந்து 6 ருபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பேருந்துகளின் கட்டணத்தை அதிரடியாக அரசு உயர்த்தியுள்ளது. சாதாரண பேருந்துகளுக்கு 5 ரூபாயில் இருந்து 6 ருபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மாநகர, நகர பேருந்துகளில் கட்டணம் குறைந்த பட்சம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம், சொகுசு பேருந்துகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. தினந்தோறும் சுமார் 2 கோடி பேர் தமிழக அரசின் பேருந்து சேவையால் பயனடைந்து வருகின்றனர். ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu government hike to bus fares

சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்சமாக மூன்று ரூபாயாக உள்ள கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகப்பட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.2,400 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் வங்கிக் கடனுக்காக போக்குவரத்துக் கழகங்களின் பணிமனைகளை அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே போக்குவரத்து கழக பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டிய தொகை மட்டும் ரூ.1500 கோடி நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பஸ்களின் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

தை பொங்கலுக்கு முன்பாக ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்பப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பஸ் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, கடந்த 2011ஆம் ஆண்டு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. 7 ஆண்டுகளுக்குப்பின்னர் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் கட்டணம் குறைந்த பட்சம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளுக்கான கட்டணம், அதிநவீன சொகுசு பேருந்துகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு விளக்கம் அதிர்ச்சியில் மக்கள்

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, எரிபொருள் உயர்வால் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழல் உள்ளதாக கூறியுள்ளது. சிறந்த சேவையை தொடர்ந்து வழங்க கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என கூறியுள்ளது. டீசல், உதிரி பாகங்கள், புதிய பேருந்துகளின் விலை உயர்வால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. இந்த கட்டண உயர்வு பேருந்துகளை பயன்படுத்தும் சாதாரண ஏழை நடுத்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+